< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
தகராறில் விவசாயி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
|26 Feb 2023 8:24 PM IST
கெங்கவல்லி:-
கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மேற்கு காட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் மாணிக்கம். விவசாயி இவருடைய மாடு நேற்று மர்மமான முறையில் இறந்தது. இதுதொடர்பாக மாணிக்கத்துக்கும், கண்ணண் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையொட்டி மாணிக்கம் அவருடைய உறவினர்கள் தங்கமணி, வீரமா, ராமலிங்கம் ஆகியோர் கண்ணன் வீட்டுக்கு சென்று கேட்டனர். அப்போது தகராறு முற்றியதில் கண்ணண் ஆத்திரம் அடைந்து 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்த புகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார் கண்ணண் மீது வழக்குப்பதிவு செய்தனர்.