< Back
மாநில செய்திகள்
அரசு பெண் டாக்டர் மீது தாக்குதல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அரசு பெண் டாக்டர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:15 AM IST

அரசு பெண் டாக்டர் மீது தாக்குதல் நடந்தது.

ராமநாதபுரம் தெற்குவாணிவீதி பகுதியை சேர்ந்தவர் முத்துபால் என்பவரின் மகள் லில்லி நித்யா பிரியதர்சினி (வயது 30). ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது அவரின் வீட்டின் முன் பகுதியில் சத்தம் கேட்கவே வந்து பார்த்தபோது அதேபகுதியை சேர்ந்த குப்புசாமி, அவரின் தாய் சந்திரா, தங்கை சரண்யா ஆகியோர் வந்து நிலத்தகராறு காரணமாக இரும்பு கம்பியால் லில்லி நித்யா பிரியதர்சினியை தாக்கினராம். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்