< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்மது போதையில் தொழிலாளி மீது தாக்குதல்
|11 Oct 2023 1:00 AM IST
கிருஷ்ணகிரியில் மது போதையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் உமர் பாரூக் (வயது 37). சிம்கார்டு விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி தேவசமுத்திரம் பொன்மலை கோவில் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கினார். அப்போது அங்கு வந்த ஒருவர் உமர் பாரூக்கிடம் மது கேட்டார். அவர் கொடுக்க மறுத்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் மேலும் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து உமர் பாரூக்கை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த உமர் பாரூக் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.