< Back
மாநில செய்திகள்
ராஜஸ்தானில் கொடூரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கற்பழித்து, எரித்து கொலை
மாநில செய்திகள்

ராஜஸ்தானில் கொடூரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கற்பழித்து, எரித்து கொலை

தினத்தந்தி
|
9 April 2023 8:06 AM IST

ராஜஸ்தானில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், 30 வயதான தலித் பெண். திருமணமான இவர், 2 குழந்தைகளின் தாய். இந்தப் பெண் வீட்டில் தனியே இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கூர் கான் என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார்.

அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்த அவர், அந்த பெண் மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அதில் உடல்கருகிய அந்தப் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கற்பழித்து தீவைத்த ஆசாமியை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தானில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்