< Back
மாநில செய்திகள்
ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து நூதன முறையில் ரூ.15 ஆயிரம் அபேஸ்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து நூதன முறையில் ரூ.15 ஆயிரம் அபேஸ்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

ஏ.டி.எம். கார்டை மாற்றிகொடுத்து நூதன முறையில் ரூ.15 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் பத்தன் வீதியை சேர்ந்தவர் ரங்க மன்னார் மகன் வெங்கடேசன் (வயது 23). இவர் தனது நண்பர் தியாகராஜனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறினார். அப்போது அவர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றபோது அங்கிருந்த மர்மநபர் நான் தங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி அவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கினார். பின்னர், பணத்தை எடுத்த பிறகு அந்த மர்மநபர் ஏ.டி.எம். கார்டை தியாகராஜனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில், வெங்கடேசன் வங்கி கணக்கில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை சோதனை செய்தபோது அது போலி என்பது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்