< Back
மாநில செய்திகள்
ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மாநில செய்திகள்

ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தினத்தந்தி
|
12 Feb 2023 5:04 PM IST

போளூரில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொள்ளையன் காரில் இருந்து இறங்கி ஏடிஎம் மையத்திற்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

போளூர் ரெயில் நிலையம் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம்மை உடைத்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை கொளுத்தி விட்டு தப்பியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, குற்றவாளிகளை தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்வதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் வெள்ளைநிற டாடா சுமோ காரில் இருந்து முககவசம், குல்லா அணிந்து கொள்ளையன் ஒருவன் இறங்கி ஏடிஎம் மையத்தை நோக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்