< Back
மாநில செய்திகள்
பெரியமேட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஒடிசாவை சேர்ந்த வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

பெரியமேட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ஒடிசாவை சேர்ந்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 Jun 2022 10:09 AM IST

பெரியமேட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரியமேடு வீராசாமி தெருவில் 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இந்த எந்திரத்தின் கட்டுப்பாடு பெங்களூருவில் இருக்கிறது.

இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டவுடன் பெங்களூருவில் உள்ள சிக்னல் காட்டி கொடுத்தது. உடனடியாக பெங்களூருவில் இருந்து இந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் மேலாளர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்த போது, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே வைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கேதர் பிள்ளை (வயது 33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்