< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் கொள்ளை
|1 Nov 2022 1:53 PM IST
சிந்தாதிரிப்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.28 ஆயிரம் நூதனமான முறையில் காணாமல் போயிருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, 2 மர்ம நபர்கள் ஒரு இரும்பு கம்பியை ஏ.டி.எம். எந்திரத்தில் நுழைத்து ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்கள் நூதனமான முறையில் இந்த பணத்தை திருடினார்களா? என்பது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்ட வங்கி நிர்வாகம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேமராவில் பதிவாகி இருந்த 2 மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.