< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
|5 Aug 2022 8:29 AM IST
திருமுல்லைவாயல் அருகே ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறியது. அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏ.டி.எம். மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். முன்னதாக ஏ.டி.எம். மையத்துக்கு செல்லும் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த சுமார் ரூ.4 லட்சம் தப்பியது.