< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்தன - ஓட்டலிலும் பரவியது
|8 Oct 2023 2:36 PM IST
சென்னை புழல் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின.
சென்னை அடுத்த புழல் சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலை கேம்ப் சந்திப்பு அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் அருகே வணிக கடைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று அதிகாலை திடீரென அந்த ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய்நோட்டுகள் மற்றும் அருகில் உள்ள ஓட்டலில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.