சிவகங்கை
காரைக்குடியில் தடகள போட்டிகள்-4, 5-ந் தேதி நடக்கிறது
|காரைக்குடியில் தடகள போட்டிகள் 4, 5-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது, 16. 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான அனைத்து தடகள போட்டிகளும் வருகிற செப்டம்பர் மாதம் 4, 5-ந் தேதிகளில் காரைக்குடி அழகப்பா உடற் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் 14, 15, 16 மற்றும் 17-ந் தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் சிவகங்கை மாவட்டம் சார்பாக பங்கேற்று விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். எனவே, மாவட்ட அளவிலான இந்த தடகள போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள வீரர், வீராங்கனைகள் சிவகங்கை மாவட்ட தடகள சங்கத்தினரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.