கள்ளக்குறிச்சி
பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள்
|கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி குறுமைய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 55 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசு
இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற உள்ளது.