< Back
மாநில செய்திகள்
பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்
கடலூர்
மாநில செய்திகள்

பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
4 Jun 2022 10:33 PM IST

பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் சர்வதேச அளவில் ஈட்டித்தந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது விளையாட்டு துறைக்கு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்தான விவரங்களை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம். எனவே இவ்விருது பெற தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்