ஈரோடு
அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டம் 15 நாட்களில் நிறைவடையும்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
|அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டம் 15 நாட்களில் நிறைவடையும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டம் 15 நாட்களில் நிறைவடையும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
அத்திக்கடவு-அவினாசி திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையாகும். கடந்த 2016-17 ஆம் ஆண்டில் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. பிறகு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்தநிலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அத்திக்கடவு -அவினாசி திட்ட செயல்பாட்டை கடந்த ஆட்சி ஏற்படுத்திய தாமதத்தை தி.மு.க. பொறுப்பேற்றதும் சரி செய்து உள்ளோம். விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சோதனை ஓட்டம்
தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. 6 நீரேற்று நிலையங்களில் 4 நீரேற்று நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள 2 நீரேற்று நிலையங்களில் சோதனை ஓட்டம் முடிக்க வேண்டும். மேலும் கிளை வாய்க்கால் வழியாக குளத்தில் சென்று நீர் நிரப்பும் பணி 15 நாட்களுக்குள் சோதனை ஓட்டமாக நிறைவு செய்யப்படும்.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.