< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய தருமபுரம் ஆதீனம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய தருமபுரம் ஆதீனம்

தினத்தந்தி
|
7 April 2024 9:50 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாட்டின் மிக தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுரம் ஆதீனம் மிக முக்கியமானதாகும். இந்த மடத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது இவரது தலைமையில் தமிழ்நாட்டின் முக்கிய மடாதிபதிகள் டெல்லி சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கினார்கள்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கடலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கி ஆசி கூறினார்.

மேலும் செய்திகள்