< Back
மாநில செய்திகள்
ஆட்ேடா டிரைவர்,  தி.மு.க. பிரமுகரிடம் நூதன மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ஆட்ேடா டிரைவர், தி.மு.க. பிரமுகரிடம் நூதன மோசடி

தினத்தந்தி
|
4 July 2023 8:16 PM GMT

ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் தவித்த ஆட்டோ டிரைவர், தி.மு.க.பிரமுகரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் தவித்த ஆட்டோ டிரைவர், தி.மு.க.பிரமுகரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள குருவம்பட்டி குடித்தருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று மதியம் பழனிச்சாமி வேலை விஷயமாக மண்ணச்சநல்லூருக்கு வந்தார். மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாமல் நின்ற அவரிடம் மர்ம நபர் ஒருவர் அணுகி பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பழனிச்சாமி அந்த நபரிடம் ஏ.டி.எம்.கார்ைட கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் இல்லை என கூறி வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்று விட்டார். பழனிச்சாமி வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.13 ஆயிரம்

இந்நிலையில் சில நிமிடங்களில் அவரது செல்போனுக்கு ரூ.13 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. மர்மநபர் நூதன முறையில் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை எடுத்துசென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

தி.மு.க. பிரமுகர்

இதேபோல் முசிறியை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வீரமலை என்பவர் கடந்த மாதம் 28-ந் தேதி மதியம் 2 மணி அளவில் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக முசிறி-துறையூர் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணம் எடுப்பது எப்படி என்று தெரியாத காரணத்தினால், அருகில் அறிமுகம் இல்லாதவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, அதன் ரகசிய குறியீட்டு நம்பரையும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரூ.1,000 எடுத்து தருமாறு கூறியுள்ளார். வீரமலையிடம் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி அவரிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு, பின்னர் வீரமலையின் வங்கி கணக்கில் இருந்து அந்த மர்மநபர் ரூ.9,000-ஐ எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்