< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம்
|14 Jun 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருேக மின்சாரம் பாய்ந்து ஊழியர் படுகாயம் அடைந்தார்.
ஆண்டிப்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). இவர், ஆண்டிப்பட்டி மின்நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர், சக்கம்பட்டி, திருவள்ளுவர் காலனி அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறி வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது தலைக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி எதிர்பாராதவிதமாக அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவரது சட்டை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் போர்வையை விரித்து பிடித்துக் கொண்டு அதில் அவரை குதிக்கச் செய்தனர். பின்னர் படுகாயமடைந்த பாண்டியை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.