< Back
மாநில செய்திகள்
வைகை அணையில் மீன் பிடித்த 2 பேர் மீது வழக்கு
தேனி
மாநில செய்திகள்

வைகை அணையில் மீன் பிடித்த 2 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
8 May 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்பிடித்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தனியார் மூலம் மீன்பிடி நடைபெற்று வருகிறது. அணை பகுதியில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை தடுப்பதற்கு தனியார் குத்தகைதாரர்கள் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடாங்கிபட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 39) என்பவர் காவலில் இருந்தார். அப்போது அங்கு சிலர் வலைகளை வைத்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அதை சுரேஷ் தடுக்க முயன்றார். இதனால் அவருக்கும், மீன்பிடித்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மீன்பிடித்தவர்கள் மீன்கள் மற்றும் வலைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சுரேஷ் வைகை அணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வைகை அணையில் மீன்பிடித்த கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சம், விக்கி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ மீன்கள், மீன்பிடிக்க பயன்படுத்திய வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்