< Back
மாநில செய்திகள்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில்அடிப்படை வசதிகள் செய்து தர பக்தர்கள் கோரிக்கை
தேனி
மாநில செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில்அடிப்படை வசதிகள் செய்து தர பக்தர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவிவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடு்த்தனர்.

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் விளக்கு பூஜை நடைபெறும். இதனால் தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வருகை தரும் பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அவ்வாறு நீராடும் பெண்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்வதற்கு தகுந்த இடம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கழிப்பறை வசதியும் இல்லாததால் அவதியடைகின்றனர். எனவே உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்