< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
|27 Oct 2023 12:15 AM IST
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சங்கரராமேசுவரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்டபதி பெருமாள் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு உள்ளன. நேற்று காலையில் வைகுண்டபதி பெருமாள் கோவில் உள்ளே ஒரு பாம்பு ஒன்று சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கோவிலில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் பாம்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.