< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
உத்தமபாளையத்தில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்
|4 July 2022 10:24 PM IST
உத்தமபாளையத்தில் அம்பதேகர் சிலை வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்
உத்தமபாளையம் கிராம சாவடியில் அம்பேத்கர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, தாசில்தார் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிராம சாவடியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. முழு உருவ வெண்கல சிலை வைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் ஆர்.டி.ஓ. பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள்,விடுதலை சிறுத்தை கட்சி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி, பொருளாளர் பெர்க்மான்ஸ், மற்றும் சிலை கமிட்டியினர் கலந்து கொண்டனர்.