< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் ரூ.25 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுமான பணி திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு பார்வையிட்டார்
|7 Sept 2022 8:02 PM IST
உளுந்தூர்பேட்டையில் ரூ.25 கோடியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுமான பணியை திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு பார்வையிட்டார்.
திருவெண்ணெய்நல்லூர்,
உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை சேலம் சந்திப்பு ரவுண்டானா அருகில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.25 கோடியில் மிக பிர மாண்டமாக வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு பார்வையிட்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது முதன்மை பொறியாளர் நாகேஸ்வரராவ், உதவி பொறியாளர் சிவபிரசாந்த் ரெட்டி, உளுந்தூர்பேட்டை பொறியாளர் ஏழுமலை, கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.