< Back
மாநில செய்திகள்
உடன்குடி அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்குஅடையாள அட்டை வழங்கல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

உடன்குடி அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்குஅடையாள அட்டை வழங்கல்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

உடன்குடி அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பாக மாணவ, மாணவியருக்கு இலவசமாக அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பிரின்ஸ் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயசுதா, துணைத்தலைவர் வேலம்மாள், கவுன்சிலர் அன்புராணி ஆகியோர் மாணவர்களுக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கண்ணமா, சுவாட்சன், ஆனந்தி, ரூபிசாந்தி, மும்தாஜ், பிருந்தா, இசைகலா ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் செல்வி, யமுனா, கலைவாணி, விஜய லெட்சுமி, சுகன்யா, ஜெஸ்மின் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்