தூத்துக்குடி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி
|திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவி மு.அஸ்மா மனிகா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். நரம்பியல் நிபுணர் எஸ்.கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தி விளக்கி பேசினார். தொடர்ந்து போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், அவற்றை மற்றவர்களும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 3-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவி மு.ஜெயலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பூ.ஜமுனா, போதைப்பொருள் எதிர்ப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆனந்தி பானு, சி.அம்பிகாபதி ஆகியோர் செய்திருந்தனர்.