< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாதனை மாணவருக்கு பாராட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாதனை மாணவருக்கு பாராட்டு

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சாதனை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர்:

நெல்லை சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அந்த கல்லூரி நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ம.அருணாசலம் தமிழ் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, முதல் பாிசு ரூ. 5 ஆயிரத்தை தட்டிச்சென்று ஆதித்தனார் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த சாதனை மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் மாணவ நலத்துறை பொறுப்பாளரான ஆங்கிலத்துறை பேராசிரியர் இ.லெனின், வணிகவியல் துறைத்தலைவர் சி.சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்