< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி இளம் அறிவியல் விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு துறைத்தலைவர் வசுமதி தலைமை தாங்கினார். விலங்கியல்துறை மாணவர் முத்துக்குட்டிராஜா வரவேற்று பேசினார். திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விலங்கியல் துறைமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆரோக்கியமேரி பர்னாந்து நன்றி கூறினார். இதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு மாணவர் ம.முத்துராஜ் வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாணவர் சப்பாணிமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை மாணவர் சிவனேசன் தொகுத்து வழங்கினா். விழா ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்களும், ஆய்வு உதவியாளர்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்