< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்நிதி சார்ந்த கல்வி பயிலரங்கம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்நிதி சார்ந்த கல்வி பயிலரங்கம்

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நிதி சார்ந்த கல்வி பயிலரங்கம் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி நடந்த பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார். தேவாளை லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் தி.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வணிக நிர்வாகிவியல் துறை பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவியல் துறை மன்ற ஒருங்கிணைப்பாளர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். பயிலரங்க ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்