< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்போதைப்பொருள் ஒழிப்பு பயிலரங்கம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்போதைப்பொருள் ஒழிப்பு பயிலரங்கம்

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு பயிலரங்கம் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணி எண்.45, சாகசக்கலை மன்றம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. இந்த பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பே.மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் பேராசிரியர்கள் உமா ஜெயந்தி, கருப்பசாமி, திலீப்குமார், முதுகலை பொருளியல் மாணவர்கள் செல்வம், ஞானஅபினாஷ், மாணவச்செயலாளர்கள் சுடலைமணி, சஞ்சய் மற்றும் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவஇளங்கோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர், சாகசக்கலைமன்ற இயக்குனர் மற்றும் மாணவர்கள் ெசய்திருந்தனர்.

மேலும், கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றம் சார்பாக சிந்தனை திறனும் மாணவர்களின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் பேராசிரியர் சிவஇளங்கோ வரவேற்று பேசினார். ரெக்காரியோ சொத்துக்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவன நெல்லை மண்டல தலைவர் தேவபிரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தினமும் செய்தித்தாள் வாசிப்பதன் அவசியத்தையும், வேைலவாய்ப்பிற்கு தேவையான அனைத்து திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மாணவச் செயலாளர் சாமுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மருதையா பாண்டியன், உமாஜெயந்தி மற்றும் மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள், பொருளியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்