< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி வளாகத்தேர்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி வளாகத்தேர்வு

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி வளாகத்தேர்வு நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சென்னை ஐகோர் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் கணிப்பொறி அறிவியல் துறை மாணவர்கள் ஆண்டனி பிரவீன், ரமேஷ்குமார், வர்ஷன் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஐகோர் கணினி மென்பொருள் நிறுவன அதிகாரியும், கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவருமான ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஜெயந்தி, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறைத்தலைவர் வேலாயுதம் செய்து இருந்தார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்