தூத்துக்குடி
தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில்மரக்கன்று நடும் நிகழ்ச்சி
|தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
சாயர்புரம்:
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சிஅதிகாரி கு.வசந்தா முன்னிலை வகித்தார். யூனியன் ஆணையாளர் மோ.ஹெலன் பொன்மணி மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை அலுவலர்கள் ரோகித் ராஜ், ஆனந்தன், பொறியாளர் தளவாய், கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாங்கனி அரிபாலகிருஷணன், தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள உள்பட பலர் கலந்து கொண்டனர்