< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி போலீஸ் நிலையத்தில் ஆ.ராசா எம்.பி. மீது இந்து முன்னணியினர் புகார்
|17 Sept 2022 12:15 AM IST
தேனி போலீஸ் நிலையத்தில் ஆ.ராசா எம்.பி. மீது இந்து முன்னணியினர் புகார் கொடுத்தனர்
இந்து முன்னணி தேனி நகர தலைவர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, இந்து மதம் குறித்தும், இந்து மக்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவருடைய பேச்சு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளது. அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.