< Back
மாநில செய்திகள்
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சாயல்குடி

கடலாடி அருகே பொதிகுளம் கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு பால்குடம் சுமந்து, அக்னி சட்டி, வேல் எடுத்து பக்தர்கள் நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதிகுளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் வாண வேடிக்கை, மேளம், தப்பாட்டங்களுடன் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலுக்கு வந்தனர். இதைதொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது இந்தநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்