தூத்துக்குடி
ஒரே நேரத்தில் சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் விளையாடி மாணவர்கள் சாதனை
|தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் விளையாடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் உலக சாதனைக்கான நிகழ்ச்சி தூத்துக்குடி பி.எம்.சி. பள்ளிக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கராத்தே மாணவ, மாணவிகள் தொடர்ந்து 1 மணி நேரம் தமிழ் நாடு வரைபடத்தின் வெளியே சுற்றி நின்று 3 விதமான கராத்தே பயிற்சி செய்தனர். இதே போன்று தமிழ்நாடு வரைபடத்தின் உள்பகுதியில் 600 மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர். ஜிம்னாஸ்டிக் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் வரைபடம் போன்று நின்று 20 நிமிடம் பிரண்ட் ரோல் மற்றும் பேக் ரோல் பயிற்சி செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை யுனிகோ வேல்டு ரெக்கார்டு மற்றும் நோபிள் வேல்டு ரெக்கார்டு ஆகிய அமைப்புகள் இணைந்து பதிவு செய்து உள்ளன. சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிலம்ப ஆசான் மணிகணேஷ், கராத்தே ஆ.சுடலைமணி, ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.