< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவசுப்பு (மதுவிலக்கு), சம்பத் (நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு) ஆகியோர் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 7 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்தனர். அதே போன்று புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 34 பேரும் மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 41 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவசுப்பு, சம்பத் ஆகியோர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்