ஈரோடு
சுதந்திர தின விழாவில்பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 365 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
|பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 365 பேருக்கு ஈரோட்டில் நடந்த சுதந்திரதின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 365 பேருக்கு ஈரோட்டில் நடந்த சுதந்திரதின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
365 பேருக்கு சான்றிதழ்
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று ஆனைக்கல்பாளையம் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி காவல்துறை, தேசிய மாணவர் படை, முன்னாள் படைவீரர் நலத்துறை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தன்னார்வலர்கள், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, செய்தித்துறை, தன்னார்வலர்கள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேலைவாய்ப்புத்துறை, வணிகவரித்துறை, கருவூலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை, தொழிலாளர் துறை, போக்குவரத்துத்துறை, நில அளவை துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி, தாட்கோ உள்ளிட்ட 40 துறைகளில் பணியாற்றி வரும் 365 பேருக்கு கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அதிகாரிகள்
காவல்துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், முருகையன், பொன்னம்மாள், கவிதாலட்சுமி, கோமதி உள்பட 43 பேர் சான்றிதழ் பெற்றனர். விழாவில் மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் குடும்பத்தினருடன் வந்து பங்கேற்று நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அவருடைய மனைவியும், ஈரோடு வணிகவரித்துறை துணை ஆணையாளருமான லட்சுமி பலியா தனிரூ உடன் விழாவில் பங்கேற்றார். இதுபோல் பலரும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.