< Back
மாநில செய்திகள்
தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் விலை குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் விலை குறைந்தது

தினத்தந்தி
|
23 Aug 2023 12:21 AM IST

வரத்து அதிகரிப்பு காரணமாக தர்மபுரியில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.35க்கு விற்பனையானது.

சின்ன வெங்காயம்

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தது.இதனால் அதன் விலை ரூ.150 வரை உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த சில நாட்களாக 1 கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ அதிகபட்சமாக ரூ.45- க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.35- க்கு விற்பனை

இந்த நிலையில் நேற்று தர்மபுரி உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து கணிசமாக அதிகரித்தது. அதே நேரத்தில் தேவை குறைந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.35- க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெளிமார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் ரூ.45 முதல் ரூ.55 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் விலை குறைந்ததால் அதன் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்