< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
செல்போன் கோபுரத்தில்பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
|30 Sept 2023 12:15 AM IST
தட்டார்மடம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழையில் கடந்த மாதம் தனியார் செல்போன் கோபுரத்தில் 18 பேட்டரிகள் கடந்த மாதம் 25-ந் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரிந் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை வழக்குபதிவு விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், இந்த பேட்டரிகளை உடன்குடி அருகே உள்ள உத்திரமாடன் குடியிருப்பைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் குமார் (வயது 30), கருப்பசாமி மகன் ஐகோர்ட் துரை (26) ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து குமார், ஐகோர்ட் துரையை போலீசார் கைது செய்தனர்.