< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
இறைச்சி கடையில்மதுபானம் விற்றவர் கைது
|5 Sept 2023 12:15 AM IST
இறைச்சி கடையில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கோழி இறைச்சி கடையில் மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது லோயர்கேம்ப் கடை வீதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 62) என்பவர் கடையில் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 10 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.