< Back
மாநில செய்திகள்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87½ லட்சத்துக்கு எள் ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87½ லட்சத்துக்கு எள் ஏலம்

தினத்தந்தி
|
9 Jun 2023 7:09 PM GMT

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87½ லட்சத்துக்கு எள் ஏலம் போனது.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.87½ லட்சத்துக்கு எள் ஏலம் போனது.

எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 833 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.136.15-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.150.90-க்கும் விற்பனை ஆனது.

ரூ.87½ லட்சம்

சிவப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.123.40-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.140.99-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

எள் மொத்தம் ரூ.87 லட்சத்து 56 ஆயிரத்து 563-க்கு ஏலம் போனது.

இந்த தகவலை ஈரோடு விற்பனைக்குழுவின் செயலாளர் ஆர்.சாவித்ரி தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்