< Back
மாநில செய்திகள்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு எள் ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு எள் ஏலம்

தினத்தந்தி
|
30 Sept 2023 3:01 PM IST

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5¾ லட்சத்துக்கு எள் ஏலம் போனது.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. 50 மூட்டைகளில் விவசாயிகள், எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.144.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.173.9-க்கும் விற்பனையானது.

இதேபோல் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.158.42-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.158.42-க்கும் விலை போனது. மொத்தம் 3 ஆயிரத்து 707 கிலோ எடையுள்ள எள் ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்து 157-க்கு ஏலம் போனது.

Related Tags :
மேலும் செய்திகள்