< Back
மாநில செய்திகள்
சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கராபுரம்,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா, சர்வ சமய பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணைத்தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், நகர தலைவர் வக்கீல் முஹம்மதுபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆதில்கான் அனைவரையும் வரவேற்றார். சங்கராபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆஷாபி ஜாகீர்உசேன் கே.எஸ்.அழகிரி பிறந்த நாளையொட்டி நடந்த சர்வ சமய பிரார்த்தனையில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த விழாவில் வட்டார தலைவர்கள் அபுல்கலாம் ஆசாத், செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் அப்பாதுரை, நாராயணன், காதர்அலி, நவாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் காங்கிரஸ் காமில்பாஷா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்