< Back
மாநில செய்திகள்
சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில்   ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
4 Aug 2022 2:51 AM IST

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், கொளத்தூர், செண்பகப்புதூர், மேட்டூர், அரியப்பம்பாளையம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம், கொத்தமங்கலம், டி.ஜி.புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 ஆயிரத்து 100 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 999-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.12 ஆயிரத்து 566-க்கும் என ரூ.1 கோடியே 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சத்தியமங்கலம், அவினாசி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்