< Back
மாநில செய்திகள்
பெருந்துறை பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
ஈரோடு
மாநில செய்திகள்

பெருந்துறை பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
24 Sept 2023 3:22 AM IST

பெருந்துறை பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பெருந்துறை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரத்துறை மூலம் ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெருந்துறை பஸ் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில் பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? என்கிற துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர்.

முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு உறுதி மொழியை சுகாதார துறை ஊழியர்கள் வாசிக்க தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்