ஈரோடு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
|பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.1¼ கோடியை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பண்ணாரி மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் நேர்த்திக்கடனாக காணிக்கைகளை செலுத்துவர். இதற்காக கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
ரூ.1¼ கோடி
ஒவ்வொரு மாதமும் இந்த கோவிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன், சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பணியில் வங்கி அலுவலர்கள், பக்தர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 877-ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 568 கிராம் தங்கம், 1230 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.