< Back
மாநில செய்திகள்
குப்பாண்டம்பாளையத்தில்எழுத்தறிவு திட்டத்தில் ஆர்வமாக படிக்கும் பெண்கள்
ஈரோடு
மாநில செய்திகள்

குப்பாண்டம்பாளையத்தில்எழுத்தறிவு திட்டத்தில் ஆர்வமாக படிக்கும் பெண்கள்

தினத்தந்தி
|
8 Sept 2023 3:37 AM IST

குப்பாண்டம்பாளையத்தில் எழுத்தறிவு திட்டத்தில் பெண்கள் ஆர்வமாக படிக்கிறாா்கள்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2-வது கட்டமாக கடந்த 1-ந் தேதி 1,111 மையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 21 ஆயிரத்து 453 பேர் கல்வி பெற உள்ளனர். அந்தியூர் வட்டாரத்தில் 100 மையங்களில் எழுத்தறிவு திட்ட வகுப்புகள் நடந்து வருகின்றன. குப்பாண்டம்பாளையம் ஊராட்சி கேத்த நாயக்கனூரில் வகுப்பறை வசதி இல்லாத நிலையிலும் அங்குள்ள பெண்கள் தரையில் உட்கார்ந்து பாடங்கள் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தன்னார்வலர் ஆசிரியரும் தரையில் அமர்ந்து அவர்களுக்கு எழுத்துக்கள் கற்பித்து வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்