தஞ்சாவூர்
கும்பகோணத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
|டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி கும்பகோணம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி கும்பகோணம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் வருகை
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். வழியில் கும்பகோணம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கும்பகோணம்-பூம்புகார் சாலை கொரநாட்டு கருப்பூர் பகுதியில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோரிக்கை மனுக்கள்
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தனர். பொதுமக்கள் சிலர் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து திருவிடைமருதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஓய்வுக்கு பின்னர் மாலை மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.