< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

கோவில்பட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஜீவா அனுக்கிரகா பசுமை இயக்கம் சார்பில் லாயல் மில் காலனி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம் மரக்கன்று நட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம், ஓய்வு பெற்ற ரொயில்வே அதிகாரி மாரியப்பன், பஞ்சாயத்து செயலாளர் ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்