கோயம்புத்தூர்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் ரெயில் நிலைய எல்கைகளை அளவீடு செய்யும் பணி தீவிரம்
|பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் ரெயில் நிலைய எல்கைகளை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் ரெயில் நிலைய எல்கைகளை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அளவீடு செய்யும் பணி
தமிழகத்தில் ரெயில்வே துறை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீட்டருக்கு கேஜ் பாதை அகலவழி ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது அனைத்து ரெயில் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட எல்கையில் உள்ள இடங்களை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட பொள்ளாச்சி மீன்கரைரோட்டில் ரெயில்வே தண்டவாளம் அருகே அளவீடு செய்யும் பணி தனியார் ஊழியர் மூலம் நடைபெற்றது. இதே போல் கிணத்துக்கடவு பகுதியில் ரெயில்வேவிற்கு இருக்கக்கூடிய காலியிடங்கள் குறித்த அளவீடு செய்யும் பணி கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
எவ்வளவு இடங்கள்
இதுகுறித்து ரெயில்வே துறையினர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடங்கள் குறித்து அளவீடு செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் முடிந்ததும் ரெயில்வே துறைக்கு எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது குறித்து தெரியவரும். இது குறித்து ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ரெயில்வே துறையில் இருந்து நிர்வாக ரீதியான அறிவிப்புகள் வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.