< Back
மாநில செய்திகள்
காட்டுநாயக்கன்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்:நாளை மறுநாள் நடக்கிறது
தேனி
மாநில செய்திகள்

காட்டுநாயக்கன்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்:நாளை மறுநாள் நடக்கிறது

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது.

தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்குகிறார். தேனி தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாமில் கொடுக்கலாம். பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு மற்றும் அரசு துறைகளின் நலத்திட்டங்கள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்