விருதுநகர்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
|இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடைசி வெள்ளி திருவிழா
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறும், அர்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. விருதுநகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து அம்மனை தரிசிக்க பக்தர்கள் வருகிறார்கள்.
இங்கு ஆடி மாதத்தில் நடைபெறக்கூடிய ஆடி கடைசி வெள்ளி திருவிழா மிகவும் முக்கியமான திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அம்மன் வீதி உலா
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளி அன்று (வருகிற 11-ந் தேதி) அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
முன்னதாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.